உணவில் விஷம் கலந்து கொலை முயற்சி..? மருத்துவமனையில் சரிதா நாயர் அனுமதி..!

Scroll Down To Discover
Spread the love

கேரளாவில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியவர் சரிதா நாயர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் குறைந்த விலையில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாக கூறி பலரை ஏமாற்றி பல கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது

இந்தநிலையில் தனது கார் டிரைவர் வினுகுமார் சிலருடன் சேர்ந்து சதி செய்து தன்னை கொல்வதற்காக உணவில் விஷம் கலந்ததாக சமீபத்தில் சரிதா நாயர் கூறினார் இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் செய்தார்

இதையடுத்து போலீசார் வினு குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர் இந்தநிலையில் சரிதா நாயர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு இடது கண் பார்வை குறைந்துள்ளது இடது காலிலும் பலவீனம் ஏற்பட்டு உள்ளது.

அவரது ரத்த மாதிரி மற்றும் தலைமுடி ஆகியவை பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள தேசிய தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது இந்த பரிசோதனையில் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் தான் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதா? என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.