கண்டெய்னர் மீது மோதி அப்பளமாய் நொறுங்கிய கார் – 5 பேர் உயிரிழப்பு.!

Scroll Down To Discover
Spread the love

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பெண்கள் நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ளனர்.

கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் திருச்செங்கோடு மோர்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி, கந்தாயி, குஞ்சம்மாள், கவிதா ஆகிய நான்கு பெண்கள் நிகழ்விடத்திலும், சாந்தி, காரை ஓட்டி வந்த ரவி மற்றும் 4 வயது குழந்தை லஷ்சனா ஆகிய மூன்று பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி சாந்தி உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் குழந்தை லஷ்சனா ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.