பரவிவரும் பறவைக்காய்ச்சல் எதிரொலி – உயிருடன் கொல்லப்பட்ட 4,000 கோழி, வாத்துகள்..!

Scroll Down To Discover
Spread the love

ஜார்கண்ட்டில் பரவிவரும் பறவைக்காய்ச்சலால் குறிப்பிட்ட மாவட்டத்தில் 4,000 கோழி, வாத்துகள் உயிருடன் கொல்லப்பட்டன.

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள அரசு கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து அப்பகுதியில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட சுமார் 4,000 பறவைகள் கொல்லப்பட்டன.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி டாக்டர் பிபின் பிஹாரி மஹதா கூறுகையில், ‘லோஹஞ்சலில் உள்ள பண்ணையில் ‘கடக்நாத்’ என்ற கறுப்பு இன கோழியில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (எச்5என்1) இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த கோழிப்பண்ணையின் சுற்றுவட்டாரத்தில் வளர்க்கப்படும் மற்றும் நோய் தொற்று அறிகுறியுடன் இருந்த 3,856 கோழிகள் மற்றும் வாத்துகள் உயிருடன் கொல்லப்பட்டன. மேலும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவை பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளளோம். மேலும் கோழி மற்றும் வாத்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.