அவுரங்காபாத் நகர் இனிமே சத்ரபதி சம்பாஜி நகர் – மகாராஷ்டிரா அரசின் முடிவுக்கு மத்திய அரசு அனுமதி..!

Scroll Down To Discover
Spread the love

மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் உள்ளிட்ட இரண்டு நகரங்களின் பெயரை மாற்றும், மாநில அரசின் முடிவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி அந்த மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. அதை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும். இந்த தகவலை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிஸ் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது