கத்தோலிக்க தேவாலயத்தில் தீண்டாமை பாகுபாடு – தலித் கிறிஸ்தவர்கள் குற்றச்சாட்டு..!

Scroll Down To Discover
Spread the love

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அய்யம்பட்டி கிராமத்தினர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற புனித மதலேன் மரியாள் ஆலய தேர் திருவிழாவுக்கு கத்தோலிக்க தலித் கிறிஸ்தவராகிய நாங்கள் வரி கொடுப்பதற்காக அய்யம்பட்டி பங்குத் தந்தையிடம் முறையிட்டோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

ஆனால், கிராம முக்கியஸ்தர்கள் சிலர் எங்களிடம் வரி வாங்க எதிர்ப்பு தெரிவித்து, பங்கு அருட்தந்தையை மிரட்டியதுடன், இனி இந்த பங்குக்கு திருப்பலி செய்ய வரக்கூடாது எனக் கூறி அனுப்பிவிட்டனர். திருவிழாவின்போது சிலையைதூக்கி தேரில் வைக்கவும், தேர் பிடித்து இழுக்கவும், எங்கள் தெருவுக்கு தேர் வரவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இது குறித்து திருச்சி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வாடிகன், இந்திய மற்றும் தமிழக ஆயர் பேரவை, மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றனர்.