காஷ்மீரில் நடைபெற்ற குளிர்கால போட்டியில் 14 பதக்கங்களுடன் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. க்ஹெலோ இந்தியா என்ற இந்த போட்டி குல்மார்க் நகரில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற போட்டியில் தமிழக வீரர்கள் மொத்தமாக 14 பதக்கங்களை வென்றுள்ளனர். ஐஸ் ஹாக்கி போட்டியில் மட்டும் 9 வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளது.
க்ஹெலோ இந்தியா என்ற இந்த போட்டியில் அங்குள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்களுடன் போட்டி போட்டு ஐஸ் ஹாக்கி போட்டியில் 9 வெள்ளி பதக்கங்களை வென்றது பெருமையாக உள்ளது. தமிழ்நாட்டில் ஐஸ் ஹாக்கி போட்டி தொடர்பாக எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் 9 பதக்கம் வாங்கி இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக வீரர்கள் தெரிவித்தனர். போட்டியை ஊக்கப்படுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

														
														
														
Leave your comments here...