பாஜக உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா – ஜார்க்கண்ட் ஆளுநராக பிப்.18-ல் பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!

Scroll Down To Discover
Spread the love

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பிப்ரவரி 18ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நாட்டில் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இவர்களில் 6 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில், பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்தார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பிப்ரவரி 18ஆம் தேதி ஜார்கண்ட் ஆளுநராக பதவியேற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.