கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!

Scroll Down To Discover
Spread the love

தெலங்கானாவில் கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள செகந்தராபாத் ரயில் நிலையத்திற்கு கோதாவரி எக்ஸ்பிரஸ்ரெயில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது .

மேலும் பயணிகள் அனைவரும் காயமின்றி நலமுடன் இருப்பதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து, ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வழிதடத்தில் ரெயில் போக்குவரத்து தாமதம் பாதிக்கப்பட்டுள்ளது.