மத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை: மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் தாக்கூர்

Scroll Down To Discover
Spread the love

மக்களவையில் சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி. விஷம்பர் பிரசாத் நிஷாத் கேள்வி ஒன்றை எழுப்பினார். அப்போது, ‘மத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நாட்டில் கருப்புப் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. எனவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டை விரைவில் திரும்பபப் பெற்று, மீண்டும் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுவெளியில் தகவல்கள் பரவுகிறது. இதுகுறித்து விளக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:-

2016-இல் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு குறித்து இன்னும் மக்கள் மத்தியில் அச்சம் இருக்கிறது. ஆனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. மத்திய அரசுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை. அதேசமயம், சந்தையில் இருந்து ஏற்கனவே திரும்பப் பெறப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை.இவ்வாறு அவர் பதிலளித்தார்.