டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும் உள்நாட்டில் தயாரான ஹைட்ரஜன் ரயில்..!

Scroll Down To Discover
Spread the love

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, தயாரான ஹைட்ரஜன் ரயில் டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ரயில்வேக்கு ரூ.2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது ஒரு பெரிய மாற்றம். அது பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும். வந்தே பாரத் ரயில்கள், சென்னை ஐ.சி.எப். மட்டுமின்றி இனி அரியானாவின் சோனிபத், மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் நகரங்களிலும் உற்பத்தி செய்யப்படும்.

இதனால், வந்தே பாரத் ரயில்களை கொண்டு நாட்டின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் பிரதமர் மோடியின் கனவு பூர்த்தியாவதற்கு வகை செய்யும். உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, தயாரான ஹைட்ரஜன் ரயில் டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும். முதலில் கல்கா-ஷிம்லா போன்ற பாரம்பரிய பகுதிகளில் இயக்கப்படும். பின்னர் இந்த ரயில் சேவை பிற இடங்களுக்கு விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்