தமிழகத்தில் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

Scroll Down To Discover
Spread the love

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (01.02.2023) 11:30 மணி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (02.02.2023) அதிகாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.