நேபாள விமான விபத்து – பலியான இந்தியர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு..!

Scroll Down To Discover
Spread the love

நேபாளத்தில் பொக்கரா விமான நிலையத்தில் எட்டி நிறுவனத்தின் விமானம் தரையிறங்க சென்றபோது தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இதில் 72 பேர் பலியானார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த குஷ்வாஹா, பிஷால் சர்மா, அனில்குமார் ராஷ்பர், சோனு ஜெய்ஸ்வால், சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகிய 5 பேரும் அடங்குவர். பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வந்தது.

சஞ்சய் ஜெய்ஸ்வால் உடல் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டது. இதற்கிடையே மற்ற இந்தியர்கள் 4 பேரின் உடல்களும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 4 பேரின் உடல்களுடன் குடும்பத்தினர் இந்தியாவுக்கு திரும்பினர்.