ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து ஆலோசனை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Scroll Down To Discover
Spread the love

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது. ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்திருந்தார். ராமேஸ்வரம் கடல் பகுதியில் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு செல்லக்கூடிய ஒரு பாலம் போன்ற அமைப்பு மணல் திட்டுகள் காணப்படுகின்றன.

எனவே இந்த ராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டும். ராமர் பாலம் என்ற கட்டமைப்பை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி பாஜக தலைவரின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனுவில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக இந்த வழக்கில் ஏற்கனவே சில ஆய்வுகளின் முடிவில் இது ஒரு கட்டமைப்பு என்று தெரியவந்துள்ளது. அடிப்படையில் இது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே அதை ஒரு தேசிய பாராம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த விவகாரத்தை விரைந்து விசாரணை எடுக்கவேண்டும் என்று கோரி பலமுறை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தான் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு இது தொடர்பாக பிரமானம் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பத்திருந்தது. இந்த நிலையில் தொடர்ச்சியாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில் ஒவ்வொரு முறையும் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான அமர்வு முன்பு இந்த வழக்கு தொடர்பாக முறையீடு வைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் சுப்பிரமணிய சுவாமி மத்திய அரசு தரப்பை குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக டிசம்பர் 12-ம் தேதி இந்த வழக்கு மத்திய அரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதுவரைக்கும் தாக்கல் செய்யாமல் வந்துள்ளனர்.

இந்த விவகாரத்தை பொறுத்த வரைக்கும் பல்வேறு கருத்துகளும் திருத்தப்பட்டிருக்கின்றன. இது ஒரு கட்டமைப்பா என்பது தொடர்பான அறிவு பூர்வமான ஆதாரங்கள் இல்லை மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே பதில்மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் தேவை என்றும் பிப்ரவரி 2-வது வாரத்திற்கு இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார். அப்பொழுது மனுதாரர் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் இந்த வழக்கை பிப்ரவரி 2 வது வாரத்தில் முதல் வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.