அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஆளுநர் வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Scroll Down To Discover
Spread the love

ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருவதை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் ஆணையாளர் நரேந்திர நாயர் பார்வையிட்டார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் .

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை, மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகிறார் என்ற தகவலை அடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையாளர் நரேந்திர நாயர் விமான நிலையம் மற்றும் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம் வாடிவாசல் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் காவல் துணை ஆணையர்கள் ஆறுமுக சாமி, சாய் பிரணித் உதவி ஆணையர் செல்வகுமார், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வேல்முருகன் ஆகியோருடன் மாநகர் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், ஆலோசனை செய்தார்.