ஜன.11-ல் திரையரங்குகளில் வெளியாகிறது அஜித்தின் ‘துணிவு’

Scroll Down To Discover
Spread the love

ஜனவரி 11-ம் தேதி அஜித்தின் ‘துணிவு’ திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித் – ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணி தற்போது ‘துணிவு’ படத்திற்காக மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி வெளியான படத்தின் ட்ரெய்லர் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது, மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 5 கோடி பார்வைகளை நெருங்கி வருகிறது.


இந்நிலையில், படம் வரும் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.