நாட்டில் 45,000 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை – மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை அறிமுகப்படுத்தப்பட்டு சில முக்கிய நகரங்களில் பயன்பாட்டில் உள்ள நிலையில், நாட்டில் 45,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4-ஜி சேவை கிடைக்காமல் உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக ஒடிசாவில் 7,592 கிராமங்களில் 4-ஜி சேவை கிடைக்காமல் உள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை கூறியுள்ளது. மேலும் நாட்டில் 93 % கிராமங்கள் 4-ஜி சேவையை பெற்றுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலையில் நடந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5-ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டது. தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.

அக்டோபர் மாதம் 1-ம் தேதி ‘இந்திய கைப்பேசி மாநாடு’ டெல்லி பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி 5ஜி அலைக்கற்றையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிலையில், நாட்டில் 45,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4-ஜி சேவை கிடைக்காமல் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை கூறியுள்ளது.