சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழ வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை..!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (48). இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 2018ம் ஆண்டு, டிசம்பர் மாதம், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு மாரியப்பன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார், பழ வியாபாரி மாரியப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தி்ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், குற்றவாளி மாரியப்பனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.