‘ஈஷா அறக்கட்டளை கல்வி நிறுவனமே – சென்னை உயர்நீதிமன்றம்

Scroll Down To Discover
Spread the love

EIA அறிவிப்பின்படி கல்வி நிறுவனங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட யோகா நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் விளக்கத்தை ஏற்று தீர்ப்பு.

யோகா நிறுவனங்களை கல்வி நிறுவனங்களின் கீழ் வகைப்படுத்தும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) அறிவிப்புக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஈஷா அறக்கட்டளை சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது. கல்வி நிறுவனம் என்ற வரையறையில் ஈஷா அறக்கட்டளையின் செயல்பாடுகளும் உள்ளடங்கும் என்றும், EIA அறிவிப்பு கல்வி நிறுவனங்களுக்கு ஒருபோதும் பொருந்தாது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியது.

இந்த விளக்கத்தின் பேரில், ஈஷாவுக்கு வழங்கப்பட்ட ஷோ கேஸ் (Show Cause) நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஈஷா அறக்கட்டளை எப்பொழுதும் சுற்றுசூழலை காப்பதிலும், அனைத்து சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டு செயல்படுவதிலும் உறுதியாக செயல்பட்டு வருகிறது.