கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் 1.45 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நவீன மீன் சந்தையை இன்று அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் மக்களின் நீண்ட நாள் கனவான புதிய மற்றும் நவீன மீன் சந்தை கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் கலந்துகொண்டு புதிய மீன் சந்தை கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ்,குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சோ.மாரிமுத்து, திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், திங்கள் நகர் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ்,திங்கள் நகர் பேரூராட்சி இளநிலை பொறியாளர் லிங்கேஸ்வரன் முன்னிலை வகித்தனர். திங்கள் நகர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள், மீனவ மக்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Special Correspondent H.TharnesH

														
														
														
Leave your comments here...