வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளை மீறியதால் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்தது மத்திய அரசு.
ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.
ராஜீவ் காந்தி அறக்கட்டளை, 1991ம் ஆண்டு ஜூன் 21ல் அமைக்கப்பட்டது. சோனியா காந்தி தலைமையில் இயங்கும் இந்த அறக்கட்டளையில், மன்மோகன்சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா, ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, சுமன் துபே அசோக் கங்குலி உள்ளிட்டோர் அறங்காவல்களாக உள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

														
														
														
Leave your comments here...