டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடித்தால் ரூ.200 அபராதம் – 6 மாதம் சிறை.!

Scroll Down To Discover
Spread the love

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்கினால், வெடித்தால் ரூ.200 அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

பட்டாசுகளை தயாரித்தால், வைத்தால், விற்றால் ரூ.5,000 வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பட்டாசு தடையை செயல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் 2023, ஜனவரி 1ம் தேதி வரை காற்று மாசு கட்டுப்படுத்தும் விதமாக பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.