குஜராத்தில் நாளை மாநில சட்ட அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு – பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

Scroll Down To Discover
Spread the love

அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நாளை தொடங்குகிறது.

நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்.

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இந்த இரண்டு நாள் மாநாட்டை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்திய சட்டம் மற்றும் நீதி பரிபாலனம் தொடர்பான விஷயங்கள் குறித்து கொள்கை வகுப்பாளர்கள் விவாதிப்பதற்கான ஒரு பொது தளத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது சிறப்பான நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், புதிய யோசனைகளை தெரிவிக்கவும், இதன் மூலம் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்த மாநாடு வழிவகுக்கும்.

விரைவான நீதி வழங்குவதற்கான மத்தியஸ்தம், ஒட்டுமொத்த சட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பழமையான, காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை அகற்றுதல், நீதி அணுக்கத்தை மேம்படுத்துதல், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்தல், விரைவான பைசலை உறுதி செய்தல், சிறந்த மத்திய, மாநில ஒத்துழைப்புக்கான மாநில மசோதாக்கள் தொடர்பான விஷயங்களில் சமச்சீர் நிலையை கொண்டு வருதல், மாநில சட்ட முறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட மாற்று தாவா தீர்வுகள் போன்ற தலைப்புகளில் இந்த மாநாட்டில் விவாதங்கள் நடைபெறும்.