கோவை ஈஷா யோகா மையத்திற்கு மத்திய வேளாண் அமைச்சர் வருகை..!

Scroll Down To Discover
Spread the love

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் கோவை ஈஷா யோகா மையத்திற்கு இன்று (அக்.14) வருகை தந்தார். அவர் தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தார்.

முன்னதாக, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர், இயக்குநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது, உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், இதேபோல் தொடர்ந்து பல உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.