குஜராத்தில் ரூ.17 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் புலனாய்வுத்துறை அதிரடியாக பறிமுதல்.!

Scroll Down To Discover
Spread the love

குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வழியாக வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் ஒன்றை சோதனையிட்டனர்.

அப்போது அதில் 850 அட்டைப்பெட்டிகளில் ‘மான்செஸ்டர்’ பிராண்ட் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. அந்த பெட்டிகள் ஒவ்ெவான்றிலும் தலா 10 ஆயிரம் சிகரெட்டுகள் இருந்தன. இந்த சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.17 கோடி ஆகும்.

அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆமதாபாத் வருவாய் புலனாய்வுத்துறையால் இந்த ஆண்டில் கைப்பற்றப்பட்ட 4-வது பெரிய சிகரெட் பறிமுதல் சம்பவம் இதுவாகும்.இந்த பறிமுதல் சம்பவம் கடந்த 11-ந்தேதி நடந்ததாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.