‘ரிவர்ஸ் பேங்க் ஆப் இந்தியா’ என்ற பெயரில் அச்சிடப்பட்டிருந்த போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் – போலீஸ் விசாரணை..!

Scroll Down To Discover
Spread the love

குஜராத் மாநிலம், சூரத்தில் ‘ரிவெர்ஸ் பேங் ஆஃப் இந்தியா’ என அச்சிடப்பட்டிருந்த 25.80 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சூரத்தில் உள்ள காம்ரஜ் பகுதியில் ஆம்புலன்ஸ் மூலம் பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆம்புலன்ஸ்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 6 பைகளில், 25 கோடியே 80 லட்சம் மதிப்பிலான பணம் இருந்துள்ளது. இந்த பணம் முழுவதும் 2 ஆயிரம் நோட்டுகளாக இருந்துள்ளது.
https://twitter.com/ANI/status/1575543933412966403?s=20&t=Nz9b2PkOBMvfa9CgadVtxA
அந்த நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை சோதனை செய்தனர். அந்த ரூபாய் நோட்டுகளில் ‘ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியா’ என்பதற்கு பதில், ‘ரிவெர்ஸ் பேங் ஆஃப் இந்தியா’ என அச்சிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் காவல்துறை பறிமுதல் செய்த 25 கோடியே 80 லட்சம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் போலியானவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி என்பதற்கு பதில், ரிவர்ஸ் வங்கி என்று அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் இது சினிமா படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்படும் ரூபாய் என்று பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த போலி ரூபாய் நோட்டு கட்டுகள் எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன? என்பது பற்றி சூரத் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்