பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி நன்கொடை

Scroll Down To Discover
Spread the love

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவில் அன்னதானத்துக்கு, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, 1.51 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்து உள்ளார்.

கேரளாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.இளைய மகன் ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவியுடன் வந்திருந்த அவர், கோவில் அன்னதான நிதியாக 1.51 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்தார்.

இதன் பின், கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘கோவில் வளாகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள மருத்துவமனைக்கு, அம்பானியிடம் உதவி கேட்கப்பட்டது. அதை பரிசீலிப்பதாக அவர் கூறினார்’ என்றனர்