மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகம் : இரு கைகளையும் விட்டு ஆபத்தான முறையில் ஜிபி முத்துவுடன் TTF வாசன் பைக்கில் சாகசம் – கட்டுபடுத்துமா காவல்துறை..?

Scroll Down To Discover
Spread the love

Twin Throttlers என்ற யூ டியூப் சேனலை நடத்தி வரும் TTF வாசன் பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவது தான் இவரின் வழக்கம். அதுமட்டுமின்றி, பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டண்ட் செய்வது, ரேஸ் செய்வது, போகும் வழியில் சிறுவர்கள், முதியவர்களை கண்டால் அவர்களுக்கு உதவுவது என்பன போன்றவற்றை இவர் வீடியோவாக போட்டு வருகிறார். சாலை விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இவர் மீது புகார் உள்ளது.

இந்நிலையில் யூடியூபர் TTF வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. வாகனங்கள் வரும் எதிர்திசையில் கைகளை விட்டு அதிவேகமாக பைக் ஓட்டி ஜிபி முத்துவுடன் இணைந்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனை சந்திக்க முத்து விருப்பப்பட்டுள்ளார்.அதன்படி இருவரும் பேசி வைத்துக் கொண்டனர். வாசன் நேராக ஜிபி முத்து சொன்ன இடத்திற்கு சென்றார். வாசனின் பைக்கில் ஏறி உட்காரும் போதே முத்து தடுமாறினார்.


அந்த வீடியோவில் இருவரும் லடாக் செல்வதாக கூறுகின்றனர். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் செல்லும் பைக்கின் வேகம் காண்போரையும் பதைபதைக்கவைக்கிறது. இந்த பயணத்தின் போது ஜிபி முத்து ஹெல்மட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.முத்துவின் வாய் அசையும் அளவுக்கு வாசன் படுவேகமாக சென்றார். நடுநடுவே லாரிகளுக்குள் நுழைந்து முத்துவை பயமுறுத்தினார். பின்னர் இரு கைகளையும் எடுத்துவிட்டு ஓட்டினார். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் செல்லும் பைக்கின் வேகம் காண்போரையும் பதைபதைக்கவைக்கிறது. இந்த பயணத்தின் போது ஜிபி முத்து ஹெல்மட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செயல்கள் தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும், மேலும் TTF வாசன் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.