பிரதமர் மோடி பிறந்தநாள் – நமீபியாவில் இருந்து இந்தியா வந்த 8 சிறுத்தைகள்- பிரதமர் மோடி விடுவிக்கிறார்.!

Scroll Down To Discover
Spread the love

தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா நாட்டில் இருந்து இன்று 8 சீட்டா வகை சிறுத்தைகள் சரக்கு விமானத்தின் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியர் கொண்டு வரப்பட்டன.

இந்த சிறுத்தைகளை பிரதமர் மோடி தனது பிறந்தநாளையொட்டி குனோ தேசிய பூங்காவில் விடுவிக்க உள்ளார். இதற்காக அவர் இன்று மத்திய பிரதேசம் வருகிறார். இந்திய காடுகளில் மீண்டும் சிறுத்தைகளை வாழவைக்கும் முயற்சியாக 5 பெண் சீட்டாக்கள், 3 ஆண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், குனோ தேசிய பூங்காவில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தனிமையான குடில் போன்ற வீட்டில் சீட்டா வகை சிறுத்தைகள் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, சீட்டா வகை சிறுத்தைகள் மேலும் பழகுவதற்காக பெரிய கூண்டில் அடைக்கப்படுகிறது.