டெல்லி ராஜ்பாத் பெயரை “கர்த்தவ்யா” பாத் என பெயர் மாற்றம்..!

Scroll Down To Discover
Spread the love

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில், காலனித்துவ ஆட்சியின் அடையாளங்கள் , ஆங்கிலேயர் காலப் பெயர்கள் முற்றிலும் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது மக்கள் உரையில் அறிவித்தார்.

இதையடுத்து பிரதமரின் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயர் லோக் கல்யாண் மார்க் என மாற்றப்பட்டது. நம் கடற்படையின் கொடியில் இடம் பெற்று இருந்த ஆங்கிலேய அடையாளம் நீக்கப்பட்டு, சத்ரபதி சிவாஜியின் அடையாளத்துடன் மாற்றி அமைக்கப்பட்டது.

தற்போது, புதுடில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலை முதல் ஜனாதிபதி மாளிகை வரையிலான ராஜபாதையின் பெயர், ‘கர்தவ்யா பாதை’ என மாற்றப்பட்டுள்ளது. ஹிந்தியில் கர்தவ்யா என்றால் கடமை என்று அர்த்தம்.