புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை – மூட வலியுறுத்தி பாஜகவினர் மனு.!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தென்றல் நகர் செல்லும் சாலையில் ராமநகர் அருகே அரசு பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது . இதன் அருகே, திடீரென கடந்த வாரம் டாஸ்மார்க் கடை புதிதாக திறக்கப்பட்டது.

இந்த பகுதியில், டாஸ்மார்க் கடை திறக்க கூடாது என, நள்ளிரவில் கடையை முற்றுகையிட்டு பெண் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதைத் தொடர்ந்து, இராஜபாளையம் காவல் துறை கண்காணிப்பாளர் பீர்த்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கடை மூடப்படும் வருவாய்துறை இடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என, உத்தரவாதம் கொடுத்தனர்.ஆனால், கடை திறக்காமல் கடையில் உள்ள பொருட்கள் எடுக்காமல் காவல்துறை பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பள்ளிக்கூடம் அருகே இருப்பதால் உடனடியாக இந்த கடையை மாற்ற வேண்டும் இல்லையென்றால் போராட்டம் தீவிரமடையும் என, அப்பகுதி மக்கள் தேரிவித்துள்ளர். இது சம்பந்தமாக , வட்டாட்சியர் சீனிவாசனிடம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட த்தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் தமிழ்ச்செல்வன், ராஜபாளையம் நகர தலைவர் ராஜகோபால், ஒன்றியத் தலைவர் பாச சக்தி ஆகியோர் வட்டாட்சியிடம் மனு கொடுத்தனர். விரைவில், கடை இடமாற்றம் செய்யவில்லை என்றால், மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தனர்.