அரசியல் லாபத்திற்காக மக்களை திசை திருப்பாமல் வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும் – அண்ணாமலை

Scroll Down To Discover
Spread the love

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு எடுத்து பின்னர் ஆளும் கட்சியாக இருக்கும் போது அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை திமுக எடுத்து வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக திமுக அரசின் நிலைபாட்டை எதிர்த்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்:- வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற காலங்கள் போய் தற்போது வந்தாரை விரட்டும் தமிழ்நாடாக மாறிவிட்டது எனவும் அதற்கு காரணம் திமுக அரசு தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு பரந்தூர் மக்களுக்கு, விவசாயிகளுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றும் என்று அந்த மக்கள் எப்படி நம்புவார்கள் என கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உடனடியாக திமுக அரசு வழங்க வேண்டும் எனவும் அவர்களுக்குச் சரியான குடியிருப்பு பகுதிகளை அமைத்துக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் புது விமான நிலையத்துக்கு நிலங்கள் வழங்க ஒப்புதல் கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் குறைந்து வரும் முதலீடுகளை கண்ட பிறகாவது இனியும் அரசியல் லாபத்திற்காக மக்களை திசை திருப்பாமல் தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என கூறினார்.மேலும் திருவாரூர் மாவட்டத்திக் ONGC நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க தமிழ்நாடு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.