900 ஆண்டுகள் பழமையான கள்ளக்குறிச்சி சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1960ல் காணாமல் போன 6 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் திருடப்பட்ட ஆறு உலோக சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

900 ஆண்டுகள் தொன்மையான சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சோழர்கால சிலைகளை அமெரிக்காவில் இருந்து மீட்டெடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.