விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, ஸ்கோச் விருது வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செயல்பட்டு வரும் ‘ஸ்கோச்’ அமைப்பு சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் தொடர்பாக நாடு முழுவதும் ஆய்வு செய்து வருகிறது. இதில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்காக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, மாவட்டத்தில் செயல்படுத்தி வரும், உதயம் திட்டம் (மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறை வசதி திட்டம்) மற்றும், கண்மணி திட்டம் (ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் திட்டம்) ஆகிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ‘ஸ்கோச்’ விருது வழங்கப்படுவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் வேளாண்மை துறை மூலமாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை சிறப்பான கட்டமைப்புகளுடன் வடிவமைத்து செயல்படுத்தியதற்காக, வெள்ளி பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்காக வழங்கப்படும் இந்த ஸ்கோச் விருதுகள் விரைவில், டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியல் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் வழங்கப்படும் என்று ஸ்கோச் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

														
														
														
Leave your comments here...