சென்னை தினம் 2-நாள் கொண்டாட்டம் – கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு..!

Scroll Down To Discover
Spread the love

ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை தினத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டியுள்ள சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரு தினங்களிலும் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணிவரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வௌிப்படுத்தும் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, ஆக. 21-ம் தேதி அன்று சென்னையில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழாவுக்கும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.