நிலுவைத் கடன் பாக்கி : மின்சாரம் வாங்க-விற்க தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களுக்கு தடை விதித்த மத்திய அரசு ..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,085 கோடி பாக்கி வைத்துள்ளன. இதில் தெலுங்கானா அதிகபட்சமாக ரூ.1,381 கோடி பாக்கி வைத்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு ரூ.926 கோடி பாக்கி வைத்துள்ளது. ராஜஸ்தான் ரூ.501 கோடியும், ஜம்மு காஷ்மீர் ரூ.435 கோடியும், ஆந்திரா ரூ.413 கோடியும், மராட்டிய மாநிலம் ரூ.382 கோடியும், மத்திய பிரதேசம் ரூ.229 கோடியும், ஜார்க்கண்ட் ரூ.215 கோடியும், பீகார் ரூ.174 கோடியும் பாக்கி வைத்துள்ளன. மேலும் மணிப்பூர் ரூ.30 கோடியும், சத்தீஸ்கர் ரூ.27.5 கோடியும், மிசோரம் ரூ.17 கோடியும் பாக்கி வைத்துள்ளன.

இந்த நிலையில் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களின் மின் பகிர்மான நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ளன. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களும் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

இதில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு நிலுவைத்தொகை அதிகமாக உள்ளதால் அந்த மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாநிலங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய தேதிக்கு பிறகு நிலுவையில் உள்ள தொகைக்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். விதிகள் 2022-ன் கீழ் இந்த நடவடிக்கையை மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.