மின்சார சட்டத் திருத்தத்தால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது – மத்திய மின்சாரத்துறை செயலாளர் விளக்கம்..!

Scroll Down To Discover
Spread the love

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுவது கட்டுக்கதை என்று மத்திய மின்சாரத்துறை செயலாளர் அலோக்குமார் தெரிவித்துள்ளார்

மின்சார சட்டத்திருத்த மசோதா தொடர்பாக மத்திய மின்சாரத்துறை செயலாளர் அலோக் குமார் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில், மின்சார சட்டத்தில் எந்த இடத்திலும் இலவச மின்சாரம் பற்றிக் குறிப்பிடவில்லை எனக் கூறியுள்ள அவர், 65வது பிரிவில், மாநில அரசுகள் எந்த தரப்பு நுகர்வோருக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்திருத்தத்தில் அந்த பிரிவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அலோக்குமார் தெரிவித்துள்ளார். விருப்பப்பட்டால் மானிய விலை மின்சாரத்தையோ, இலவச மின்சாரத்தையோ மாநில அரசுகள் தொடரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.