திறப்பு விழாவிற்கு தயாராகும் காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்.!

Scroll Down To Discover
Spread the love

காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் பாரீஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை விட 35 அடி அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செனாப் ரெயில்வே பாலம் ஸ்ரீநகரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான ரெயில்வே பாலமாக செனாப் பாலம் அமைந்துள்ளது.

இது நில அதிர்வுகளில் ரிக்டர் அளவுகோலில் 8 வரை தாங்க வல்லது. உத்தம்பூர், ஶ்ரீநகர், பரமுல்லா ரெயில் இணைப்பு திட்டத்தின் கீழ் 1,486 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வே துறையின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுவதாக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த பாலத்தின் மீது 266 கி.மீ. வேகத்தில் ரயில் சென்றாலும், அதனை தாங்கும் வகையில் இதன் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த பாலம் அமைந்துள் இடம் சமமில்லாத பகுதி என்பதால், அதன் கட்டுமான பணியின் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக இதில் பணியாற்றிய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்டுள்ள செனாப் ரயில்வே பாலம், நவீன தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு மிகவும் உறுதியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாலத்தின் 98 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதன் திறப்பு விழா இன்று கொண்டாடப்பட்டது.