விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பாக தேசியக்கொடி வழங்கும் விழா..!

Scroll Down To Discover
Spread the love

மத்திய அரசு நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிற்க்கு தேசியக்கொடி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன் தேசிய கொடியினை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக முதன்மை இயக்குநர் சந்திர பிகாஷ் கோயல் அவர்களிடம் வழங்கி தேசிய கொடி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மதுரை விமான நிலைய இயக்குனர் பாபு மற்றும் பொது மேலாளர் ஜானகிராமன்’ மதுரை மண்டல வனத்துறை அலுவலர் அன்ஜன் குமார், மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமி தபெல்லா,திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா ஆகியோருக்கு தேசிய கொடியினை,

மதுரை விமான நிலைய துணை கமாண்டர் உமாமகேஸ்வரன் வழங்கினார். மேலும் ,பல்வேறு ஊர்களில் இருந்து மதுரை விமான நிலையம் வழியாக வந்த பயணிகளுக்கு மத்தியத் தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தேசியக்கொடியை வழங்கினார்.