நிரவ் மோடியின் ரூ.250 கோடி சொத்துகள் முடக்கம். . அமலாக்கத்துறை அதிரடி

Scroll Down To Discover
Spread the love

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து, சி.பி.ஐ. நெருக்கடி முற்றியதும் வெளிநாட்டுக்கு தப்பியோடினார்.

லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது இங்கிலாந்து சிறையில் இருக்கும் நீரவ் மோடியை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிரவ் மோடி ஹாங்காங்கில் போலி நிறுவனத்தின் பேரில் தங்கம், வைரம் மற்றும் விலையுர்ந்த ஆபரணங்கள் மற்றும் வங்கி டெபாசிட் என பதுக்கி வைத்திருந்த ரூ.253.62 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று அதிரடியாக முடக்கியுள்ளது.