வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – தீயணைப்புத் துறையினர் ஒத்திகை பயிற்சி.!

Scroll Down To Discover
Spread the love

வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மதுரை மாவட்டம் சார்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை தற்பொழுது தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு சார்பாக முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது ஒத்திகை பயிற்சியானது மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் தெப்பத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மதுரை டவுன் தல்லாகுளம் அனுப்பானடி தீயணைப்பு நிலைய மற்றும் நிலைய அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி எவ்வாறு தப்பிப்பது, மேலும் ரப்பர் படகு மூலம் மீட்கும் பயிற்சியும் நடைபெற்றது. பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

– மதுரை ரவிசந்திரன்