இந்தியாவில் 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதை… பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதை பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனாவில் 2019ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி, ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த தொற்றால் உலகளவில் 56 கோடி பேர் பாதித்துள்ளனர். 63 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களின் இய்ல்பு வாழ்க்கை முடங்கி போனது. கொரோனாவை தடுக்க மற்றும் கட்டுப்படுத்துவதற்காக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 16ம்தேதி முதல் அரசு இலவசமாக வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு ஜனவரியில் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்ட நிலையில் பெரும்பான்மையான மக்கள் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் 200 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் தடுப்பூசி டோஸ் 200 கோடியை தாண்டி உள்ளது. ஒன்றிய சுகாதாரதுறையின் புள்ளிவிவரங்களின்படி வயது வந்தவர்களில் 98 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும் 90 சதவீதம் பேர் 2 டோஸ்களும் எடுத்து உள்ளனர். தற்போது, 2 டோஸ் தடுப்பூசியுடன், முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதை பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ட்விட்டரில் பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், ‘200 கோடி தடுப்பூசிகளை செலுத்தி மற்றொரு மைல்கல்லைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். கொரோனா தாக்கத்தைத் தணித்ததற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடனான எங்கள் தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.