சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்…. பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..!

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியின் போது, சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPSஅவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் (Monthly Crime Meeting) மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து திருட்டு பொருள்களை மீட்ட தனிப்படையினர் மற்றும் செயின் பறிப்பு வழக்குகளில் குற்றவாளிகளை பிடித்து திருட்டு பொருள்களை மீட்ட தனிப்படையினர் தங்களது புலன் விசாரணயில் இருக்கும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை விரைந்து முடித்த காவல் அதிகாரிகள், கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்களை விற்ற குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினர்,நீதிமன்ற நடைமுறைகளின் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், குற்றவாளிகளை கைது செய்ய அதிகாரிகளுக்கு உதவிப்புரிந்த தனிபிரிவு காவலர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

: Tharnesh -H