ஓலா நிறுவனத்துக்கு ரூ.1.67 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி..!

Scroll Down To Discover
Spread the love

KYC விதிமுறைகளுக்கு இணங்காததற்காக ஓலா நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ஜூன் 12 அன்று ஒரு கோடியே 67 லட்சத்து,80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் அல்லது பிபிஐகள் (Prepaid Payment Instrument or PPIs) தொடர்பாக ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை கூறியிருந்ததாகவும் , அந்த விதிமுறைகளை ஓலா நிறுவனம் மீறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகவும். ரிசர்வ் வங்கி தனது செய்திக்குறிப்பில் அறிவித்திருந்தது. மேலும் ஓலா ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தாங்கள் அனுப்பிய நோட்டீஸுக்கு சரியான பதிலை கூறவில்லை என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

“ஓலா ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (நிறுவனம்) மீது சில விதிகளுக்கு இணங்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ₹1,67,80,000/- (ஒரு கோடியே அறுபத்து ஏழு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் மட்டுமே) அபராதம் விதித்துள்ளது. ஆகஸ்ட் 27, 2021 தேதியிட்ட பிபிஐகளின் முதன்மை வழிகாட்டுதல்கள் (அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டது) மற்றும் முதன்மை வழிகாட்டுதல்கள் மற்றும் 2016 பிப்ரவரி 25, 2016 தேதியிட்ட (அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டது) KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் ) வழிகாட்டல்கள்,முறையாக பின்பற்றப்படவில்லை ” என ரிசர்வ் வங்கி தனது செய்திக் குறிப்பில் விளக்கம் அளித்துள்ளது.

பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007, பிரிவு 30ன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை நடவடிக்கையில் உள்ள குறைபாடுகளைத் தொடர்புடையது என்றும் மேலும் அதன் வாடிக்கையாளர்களுடன் நிறுவனம் மேற்கொண்டுள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்துடனும் ரிசர்வ் வங்கியின் அபராத நடவடிக்கை தொடர்புடையது அல்ல என்றும் ஆர்பிஐ விளக்கம் கொடுத்துள்ளது. அண்மைக் காலமாகவே அனைத்து வங்கி மற்றும் நிதி சேவை அமைப்புகள் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுகிறதா என ஆர்பிஐ தீவிரமாக கண்காணித்து வருகிறது.