குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டை அழித்துவிடும் – பிரதமர் மோடி பேச்சு

Scroll Down To Discover
Spread the love

ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் தியோகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.16,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 657 ஏக்கர் பரப்பளவில் 401 கோடி ரூபாய் செவில் தியோகர் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தியோகர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டை அழித்துவிடும். இந்தியாவில், பல குறுக்குவழிகள் உள்ளதால், குறுக்கு வழி அரசியலில் இருந்து தள்ளி நிற்கவேண்டும். நாட்டில் இந்த வகை அரசியல் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. குறுக்கு வழி அரசியல் மூலம் ஓட்டுக்களைப் பெறமுடியும். குறுக்கு வழியில் அரசியல் செய்பவர்கள் எப்போதும் விமான நிலையங்கள் அமைத்தது இல்லை. நவீன நெடுஞ்சாலைகள் அமைத்தது கிடையாது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தது இல்லை.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுத்ததும் கிடையாது. இந்தியா ஆன்மிகம், பக்தி மற்றும் யாத்திரை தலங்களின் பூமி. யாத்திரைகள் நம்மை சிறந்த தேசமாகவும், சமுதாயமாகவும் மாற்றியுள்ளது. தியோகரில் ஜோதிர்லிங்கமும், சக்தீ பீடமும் உள்ளது. நீண்ட தூரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தியோகர் நகருக்கு வருகின்றனர் என தெரிவித்தார்.