அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுமற்றும் உறுதிமொழி ஏற்பு நடந்தது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பாக எனது குப்பை என்பொறுப்பு என்று உறுதிமொழி எடுத்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்திற்கு, பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத்தலைவர் சாமிநாதன்,
செயல் அலுவலர் ஜீலாபானு, இளநிலை உதவியாளர்கள் ராஜா, அபிதா, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் மற்றும் தேசிய மாணவர் படை மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று மரக்கன்று, குப்பை தொட்டி , மஞ்சள் பை வழங்கினர். இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.