புளியங்குளத்தில் முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை அருகே சிலைமான் நடந்த கர்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்ட 869 பேர் மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர். திருப்பரங்குன்றம் தாலுகா, சிலைமான் புளியங்குளத்தில் முதல்வரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில், வட்டார மருத்துவர் தனசேகரன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் புளியங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்தர பாண்டியன் துணைத் தலைவர் ஆசின் பாரி’ சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு மருத்துவ முகாமில், கர்ப்பிணிகள் மற்றும் இதய நோயாளிகள் குழந்தைகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர், ஸ்கேன், இ.சி.ஜி ரத்த பரிசோதனை உள்ளிட்டவை மூலம் நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில், 869 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்