ஆகாசா ஏர் விமான நிறுவனம் செயல்பாடுகளைத் தொடங்க டிஜிசிஏ அனுமதி அளித்துள்ளது. ஜூலை மாத இறுதியில் சேவை தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் ஆகாசா ஏர் விமானம் நிறுவனத்திற்கு, வர்த்தக ரீதியான விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, இவர் இந்திய பங்குசந்தை முதலீட்டாளர்களில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அது மட்டுமின்றி மூன்றுக்கும் மேற்பட்ட வங்களின் பங்குதாரராகி உள்ளார்.
இந்நிலையில் ஆகாசா ஏர் விமான நிறுவனம், வர்த்தக ரீதியான விமான போக்குவரத்திற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. அதற்கான ஒப்புதலை விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தனது டுவிட்டரில் கூறியுள்ளார். விரைவில் பயணிகள் விமான சேவைக்கும் அனுமதி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

														
														
														
Leave your comments here...