தெலங்கானாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடி – வரவேற்பதை தவிர்க்கும் முதல்வர்சந்திரசேகர ராவ்..!

Scroll Down To Discover
Spread the love

ஐதராபாத்தில் நடக்கும் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை வரவேற்க, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செல்ல மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு, சந்திரசேகர ராவ் தவிர்ப்பது இது 3வது முறையாகும். அதேநேரத்தில், இன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் களமிறங்கியுள்ள யஷ்வந்த் சின்ஹாவை நேரில் சென்று வரவேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை இன்று விமான நிலையத்திற்கு சென்று நேரடியாக வரவேற்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் வந்திறங்கும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு தெலங்கானா முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். மறுமுறம், யஷ்வந்த் சின்ஹா வந்திறங்கும் அதே விமான நிலையத்தில் பிரதமர் மோடியும் இன்று வருகை தர உள்ளார்.

அவருடைய விமானம் வந்த சில மணி நேரம் கழித்து, பிரதமர் மோடி தன்னுடைய விமானத்தில் தரையிறங்குகிறார். இந்நிலையில், அனைத்து அமைச்சர்களும், முதல்வர் உட்பட, யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்க செல்வதால், ஆளுங்கட்சியான தெலுங்கான ராஷ்திரிய சமிதியை (டிஆர்எஸ்) சேர்ந்த ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே இன்று விமான நிலையத்திற்கு சென்று நேரடியாக பிரதமரை வரவேற்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இன்று தெலங்கானாவிற்கு வருகை தரும் பிரதமரை வரவேற்க அவர் செல்லமாட்டார் என்ற தகவல் மேலும் விரிசலை அதிகரித்துள்ளது