மின்வாரிய ஊழியரை மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் – நடவடிக்கை எடுக்க கோரி, தொழிற்சங்க ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள குடியிருப்பில் மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் மாற்று இடத்தில் அமைக்குமாறு வலியுறுத்தினார்.

இதனை அடுத்து, மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை விளக்கிய போதும், காவலர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாத வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அரசர டி, மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவல்துறையினர் அத்துமீறி தாக்குதலை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதோடு, காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எஎழுப்பினர்.

– மதுரை ரவிசந்திரன்