அக்னிபாத் போராட்டம் : முப்படைகளின் தளபதிகளையும் சந்திக்கிறார் பிரதமர் மோடி..!

Scroll Down To Discover
Spread the love

முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. குறிப்பாக தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.

இந்த நிலையில் அக்னிபத் திட்டம் தொடர்பாக , தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளின் தளபதிகளையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் . அதன்படி, முப்படைத் தளபதிகளும் இன்று தனித்தனியாக பிரதமரை சந்திக்கவுள்ளனர். கடற்படை தளபதி ஹரிக்குமார் பிரதமரை முதலில் சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது. இந்த சந்திப்பின் போது,அக்னிபத் போராட்டம் ,இந்த திட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.